மீண்டும் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை.

by Editor / 24-04-2024 10:07:25am
மீண்டும் ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.240 அதிகரித்து ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6,730 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.86.40-க்கும், 8 கிராம் ரூ.691.20-க்கும் விற்பனை ஆகிறது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை சரமாரியாக அதிகரித்து வந்து, சமீபத்தில் ரூ.55,000-ஐ கடந்து விற்பனை ஆனது. நேற்று ரூ.1,000 விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.

 

Tags : மீண்டும் ஏறுமுகத்தில்

Share via