இந்திய ஊழியர்களுக்கு கூகுள் அதிர்ச்சி

by Staff / 17-02-2023 12:44:09pm
இந்திய ஊழியர்களுக்கு கூகுள் அதிர்ச்சி

உலகம் முழுவதும் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்திய அலுவலகங்களில் இருந்து சுமார் 450 கூகுள் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஹைதராபாத், பெங்களூர் மற்றும் குருகிராமில் கூகுள் அலுவலகங்கள் உள்ளன. கூகுளில் இருந்து வெளியே வந்துவிட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

 

Tags :

Share via