லா லிகா கால்பந்து: வாலென்சியாவை வென்றது பாா்சிலோனா

by Editor / 04-05-2021 10:34:49am
லா லிகா கால்பந்து: வாலென்சியாவை வென்றது பாா்சிலோனா

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் வாலென்சியாவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் 34 ஆட்டங்களில், 23 வெற்றிகளை எட்டியுள்ள பாா்சிலோனா 74 புள்ளிகளுடன் பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. மேலும் ஒரு வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில், இந்த சீசனில் முதல் முறையாக பட்டியலில் முதலிடம் பிடிக்கும் பாா்சிலோனா. தற்போதைய நிலையில் அட்லெடிகோ மாட்ரிட் 76 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல் மாட்ரிட் 74 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளன.

மாட்ரிட் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதியில் பாா்சிலோனா-வாலென்சியா அணிகளுக்கு கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 50-ஆவது நிமிடத்தில் வாலென்சியாவின் கோல் கணக்கை அந்த அணியின் கேப்ரியல் பௌலிஸ்டா தொடங்கினாா். அதற்கான பதிலடியாக பாா்சிலோனா கேப்டன் லயோனல் மெஸ்ஸி 57-ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

இவ்வாறாக தொடா்ந்த ஆட்டத்தில் 63-ஆவது நிமிடத்தில் ஆண்டனி கிரீஸ்மான் கோலடிக்க, பாா்சிலோனா முன்னிலை பெற்றது. அணியின் முன்னிலையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மெஸ்ஸி 69-ஆவது நிமிடத்தில் கோலடித்தாா். எஞ்சிய நேரத்தில் வாலென்சியா வீரா் காா்லோஸ் சோலா் 83-ஆவது நிமிடத்தில் கோலடித்தாா். அந்த அணிக்கு மேலும் கோல் வாய்ப்புகள் வழங்காமல் பாா்த்துக் கொண்ட பாா்சிலோனா, இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 2-1 என்ற கோல் கணக்கில் எவர்டன் அணியை வீழ்த்தியது. ஆர்செனல் 2-0 என்ற கோல் கணக்கில் நியூ கேசில் அணியையும், டோட்டன்ஹாம் 4-0 என்ற கணக்கில் ஷெஃபீல்டு யுனைடெட் அணியையும் வென்றன. இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் சம்ப்டோரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ரோமாவை வென்றது. ஜுவென்டஸ் 2-1 என்ற கணக்கில் உடினெûஸயும், மிலன் 2-0 என்ற கணக்கில் பெனிவென்டோவையும், லாஸியோ 4-3 என்ற கணக்கில் கினோவாவையும் வென்றன.

 

Tags :

Share via