சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட தடை.

by Admin / 26-12-2021 08:01:36pm
சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட தடை.

சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட தடை... 

 சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து  வசூலை ஈட்டிய படம் டாக்டர் இந்தப்படத்தின் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன்   படமான அயலானில் ரகுல் ப்ரீத் சிங்குடன் இணைந்து நடித்து முடித்திருந்தார். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் 24 ஏ. எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள  படத்தை இன்று நேற்று நாளை  இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.  குழந்தைகளை கவரும்   எல்லா அம்சங்களும் நிறைந்த  படமாக தயாராகியுள்ள படம்   கிறிஸ்துமஸுக்கு வெளிவரும் என்று அறிவித்திருந்த நிலையில்  அயலான் படம் தள்ளிப்போட பட்டது.  டேக் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் அயலான் திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் , எங்கள் நிறுவனத்திடம் இருந்து 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 5 கோடி கடனாக பெற்றிருந்த து வட்டியோடு சேர்ந்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளது. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி செலுத்தும் வரையில் 24 ஏ.எம் ஸ்டுடியோஸ்- கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்  தயாரிக்கும் அயலான் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி  அயலான் படத்தை வெளியிட 2022, ஜனவரி 3 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து  வழக்கு விசாரணையை  ஒத்தி வைத்தார் படத்தை வெளியிட படக்குழு தொடர்ந்து   முயற்சி மேற்கொண்டு வருகிறது.

 

Tags :

Share via