முன்விரோதத்தால் கொலையா.. குளத்தில் சடலமாக மீட்பு.........

by Admin / 27-12-2021 10:23:06am
முன்விரோதத்தால் கொலையா..   குளத்தில் சடலமாக மீட்பு.........


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தாப்பாத்தி கிராமத்தினை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் பூமிராஜ். இவர் தற்பொழுது முத்துலாபுரம் வயல் தெருவில் வசித்து வந்துள்ளார்.

தொடக்கத்தில் கூலி வேலை செய்து வந்த, பின்னர் அடிதடி என பலரிடமும் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து பூமிராஜ் குடும்பத்தினர் அவரிடமிருந்து பிரிந்து வாழ்கின்றனர்.

பூமிராஜ் மீது எட்டயபுரம், மசார்பட்டி காவல் நிலையங்களில் அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சூழ்நிலையில் கடந்த 22ந்தேதி வீட்டில் இருந்த பூமிராஜ் திடீரென காணமால் போனதாக தெரிகிறது.

இதையெடுத்து அவரது உறவினர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் பூமிராஜை தேடி பார்த்ததில் அவர் எங்கும் கிடைக்கவில்லை

இது தொடர்பாக காவல்துறையினர் பத்திரிக்கை  நாளிதழ்களிலும் விளம்பரம் கொடுத்தாக தெரிகிறது. 

இந்த சூழ்நிலையில் காணமால் போன பூமிராஜை தேடுவதில் காவல்துறையினர் சுணக்கம் காட்டுவதாக கூறி இன்று  அவரது உறவினர்கள் தாப்பாத்தியில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையெடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
அவரை கண்டுபிடிக்க முயற்சி எடுத்து வருவதாக கூறியதை தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

இதனை தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை செய்தனர். இந்நிலையில் இன்று மாலையில் முத்துலாபுரம் கிராமத்திற்கு அருகேயுள்ள குளத்தில் இறந்த நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையெடுத்து போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் அது காணமால் போன பூமிராஜ் சடலம் என்பது தெரியவந்தது. 

இதன் பின்னர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக பூமிராஜ் அடித்து கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

காணமால் போனவர் குளத்தில் சடலமாக கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


 

 

Tags :

Share via