11 மருத்துவக்கல்லூரிகள் இன்று பாரதப் பிரதமரால் திறந்து வைக்கப்பட உள்ளது.

by Editor / 12-01-2022 12:14:13am
11 மருத்துவக்கல்லூரிகள் இன்று  பாரதப் பிரதமரால் திறந்து வைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் காணொளி வாயிலாக பங்கேற்கின்றனர், விருதுநகர், ராமநாதபுரம், உள்பட தமிழகத்தில் 11 இடங்களில் புதியதாக மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளன, இதில் விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிக்காக மாநில அரசு 250 கோடி ரூபாய், மத்திய அரசு 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது, இந்த விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின், வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டது, இந்த நிலையில் கொரோனோ தொற்று பரவல் காரணமாக பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. காணொளி காட்சி மூலம் இன்று நடைபெறும் கல்லூரி திறப்பு விழாவை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைப்பார்கள் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

11 மருத்துவக்கல்லூரிகள் இன்று  பாரதப் பிரதமரால் திறந்து வைக்கப்பட உள்ளது.
 

Tags :

Share via