கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு... 20 பேருக்கு மூச்சுத்திணறல்..!

by Editor / 13-05-2021 10:32:05am
கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு... 20 பேருக்கு மூச்சுத்திணறல்..!

கடலூர் சிப்காட்டில் இயங்கி வரும் ரசாயன ஆலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஷிப்ட் அடிப்படையில் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று காலை 6 மணி ஷிப்ட் தொடங்கிய சிறிது நேரத்தில், ஆலையின் இரண்டாவது தளத்தில் இருந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்கிறது. அதில் நிகழ்விடத்திலேயே 2 பேர் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் ஆலையை சூழ்ந்த புகையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதனிடையே பாய்லர் வெடித்ததால் சிப்காட் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via