திண்டுக்கலில் நடைபெற்ற அமைச்சர் சீனிவாசன் தலைமையிலான கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

by Admin / 13-11-2018
திண்டுக்கலில் நடைபெற்ற அமைச்சர் சீனிவாசன் தலைமையிலான கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

திண்டுக்கல்: திண்டுக்கலில் அமைச்சர் சீனிவாசன் பங்கேற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. திண்டுக்கலில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

விழா நடைபெற்று கொண்டிருக்கும் போது தொப்பம்பட்டியை சேர்ந்த நிர்வாகிகள் சத்துணவு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதேபோல் கூட்டுறவு தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறிது நேரம் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் நாற்காலிகளை வீசி எரிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. நிர்வாகிகள் கூட்டமானது அமைச்சர் சீனிவாசன் பேசிய பிறகு மாவட்ட செயலாளர் மருதுராஜ் பேசும் போது இடையில் குறுக்கிட்ட தொப்பம்பட்டி நிர்வாகிகள் இதற்கு பதில் தெரிவித்துவிட்டு கூட்டத்தை நடத்துங்கள் என முறையிட்டனர். அதற்கு வனத்துறை அமைச்சர்கள் சமாதான படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொப்பம்பட்டி நிர்வாகிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தற்போது அங்குள்ள போலீசார் தள்ளுமுள்ளில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூட்டம் நிறைவு பெற்றது.

Share via