பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்- எச்சரிக்கை விடும் விவசாயிகள்

by Admin / 01-03-2019
பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்- எச்சரிக்கை  விடும் விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் 33 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார் செயலாளர் வழக்கறிஞர் மூர்த்தி அனைத்து வணிகர் சங்க தலைவர் செங்கோட்டையன் பொருளாளர் காளியண்ணன் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர்.

பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்- எச்சரிக்கை  விடும் விவசாயிகள்

பாரூர் கிழக்குப்புற கால்வாயிலிருந்து 33 ஏரிகளுக்கு உபரிநீர் கால்வாய் அமைக்க 2005ஆம் ஆண்டில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டும் இதுநாள் வரை கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. போதிய மழையின்மையால் ஊத்தங்கரை போச்சம்பள்ளி வடபகுதியில் உள்ள மா மற்றும் தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆதலால் பாரு கிழக்குப்புற கால்வாயிலிருந்து 33 ஏழைகளுக்கான உபரிநீர் இணைப்புக் கால்வாய் உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏரி பாசன கால்வாய்க்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு 14 கோடி வைப்பீடு செய்து 2 ஆண்டுகளாக ஆர்டிஓ கிருஷ்ணகிரி வங்கி கணக்கில் உள்ளது இந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.கால்வாய் அமைப்பதற்கானடெண்டர் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.10 ஆண்டுகளுக்கு மேலாக 33 ஏரி பாசனத்திற்கு உட்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் வலியுறுத்தியும் விவசாயிகள் வரட்சியால் பாதிக்கப்பட்ட நிலையிலும் கால்வாய் அமைக்கும் பணியை முடித்ததை கண்டித்தும் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை வழங்காததை கண்டித்தும் அனைத்து விவசாயிகள் வீடுகளிலும் கால்வாய் அமைக்கும் வரை கருப்பு கொடி ஏற்றுவது எனவும்,33 ஏரிகளின் பாசன கால்வாய் அமைக்கும் திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்காமல் இருப்பதை கண்டித்தும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடிநீர் பஞ்சம் விவசாயத்திற்கு போதிய நீரில்லாமல் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சம் இவைகளை கருத்தில் கொண்டும் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும் கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்ற கோரி வருகின்ற 2019 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.