திமுக மாவட்ட ஊராட்சித்தலைவர் மீது திமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

by Editor / 14-03-2022 06:40:23pm
திமுக மாவட்ட ஊராட்சித்தலைவர் மீது திமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

தென்காசியில் திமுக வை சேர்ந்த மாவட்ட ஊராட்சி தலைவர் மக்கள் நலத்திட்டத்திற்காக தமிழக அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.1.75 கோடி மோசடி செய்ததாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி  மாவட்ட  ஊராட்சிக்குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன்தலைமையில்  மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சந்திரலீலா,  கனிமொழி, முத்துலெட்சுமி, சுதா, சுப்பிரமணியன், பூங்கொடி உள்ளிட்ட 8 பேர் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜாய் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்தமனுவில் கடந்த ஜனவரி 12-ம் தேதி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 7 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில் அனைத்து உறுப்பினர்கள் கையெழுத்திட்டோம், அதன் பின்னர் கூட்டம் நிறைவடைந்தது. ஆனால் அதன் பின்னர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி செயலாளர் உமாசங்கர் ஆகியோர் கூடுதலாக சில  தீர்மானங்களை சேர்த்து, அதன் மூலம் ரூ.1.75 கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றியது போன்று நிறைவேற்றி மோசடி செய்துள்ளனர். 

இது தொடர்பாக விசாரணை நடத்தி, கூடுதலாக சேர்க்கப்பட்ட  தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த தீர்மானங்கள் மூலம் வரப்பெற்ற ரூ.1.75 கோடி நிதியை அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் பிரித்து கொடுத்து அந்தந்த பகுதிகளில் மக்களின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், மேலும், தீர்மானங்களை தேவையின்றி உறுப்பினர்களின் சம்மதமின்றி மோசடியாக பதிவு செய்த்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு 14 உறுப்பினர்களை கொண்டது.இதில் திமுக கூட்டணி சார்ந்த உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுகவினரே..திமுக  மாவட்ட ஊராட்சி  தலைவர் மீது மோசடி புகார் குற்றம் சாட்டியுள்ளது   பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் திமுக தெற்குமாவட்டம்..வடக்கு மாவட்டம் என்று உள்ளதால் கோஷ்டி போரட்டம் என்றும் கூறப்படுகிறது

 

Tags : DMK members blame DMK district panchayat chief

Share via