கொடைக்கானலுக்கு செல்லும் முதல்வர் டிரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறக்க தடை 

by Editor / 28-04-2024 09:21:02am
கொடைக்கானலுக்கு செல்லும் முதல்வர் டிரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறக்க தடை 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் நாளை முதல் வரும் மே 4ஆம் தேதி வரை டிரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி மாவட்ட எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில், கோடை வெயிலும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கள்கிழமை) செல்கிறார். மே 4ஆம் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.முதலமைச்சரின் வருகையையொட்டி, கொடைக்கானல் பகுதிகளில் டிரோன் கேமராக்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : கொடைக்கானலுக்கு செல்லும் முதல்வர் டிரோன் கேமராக்கள் மற்றும் பலூன்கள் பறக்க தடை 

Share via