கஞ்சா விற்றவர் கைது - கரூர்.

by Admin / 01-03-2019
கஞ்சா விற்றவர் கைது - கரூர்.

கஞ்சா விற்றவர் கைது. அவரிடம் இருந்து ஒண்ணேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை. வெங்கமேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கணேசன் வயது 31.

இவர் நேற்று வெங்கமேடு சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்தது இதனை தொடர்ந்து கணேசனை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த ஒன்னே கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். . திருமணமான இளம்பெண் தற்கொலை. கோட்டாட்சியர் விசாரணை. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் போதும் பொண்ணு. இதேபோல் மதுரையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் சரகத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி கோட்டை அருகே உள்ள கோட்டூர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இரண்டு குழந்தைகளும் சிசேரியன் மூலம் பிறந்ததால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுதவித்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். போதும் பொண்ணுக்கு தற்போது வயது 21 திருமணமாகி ஆறு வருடங்களில் தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via