கன்னியாகுமரி மாவட்டதில் 28,29-ந் தேதி 5 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது.

by Editor / 27-03-2022 09:52:36am
கன்னியாகுமரி மாவட்டதில் 28,29-ந் தேதி 5 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து வருகிற 28, 29ம் தேதிகளில் நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றன .

குமரி மாவட்டத்திலும் இந்த இரண்டு நாட்கள் போராட்டத்தையொட்டி மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் குமரி மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கமும் பங்கேற்கிறது .

இது தொடர்பாக தொமுச ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் அகஸ்தீசன், தொமுச பொதுச்செயலாளர் ஜலீல், துணை செயலாளர் பாஸகர், சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலாளர் பொன் சோபனராஜ், துணைத் தலைவர் அந்தோணி உட்பட நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் நிர்வாகிகள் கூறியதாவது:

பெட்ரோல் டீசல் கேஸ் விலையை ஜிஎஸ்டி வரி குல் கொண்டு வர வேண்டும்.மோட்டார் வாகனச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வருகிற 28,29ந் தேதிகளில் போராட்டம் நடக்கிறது.

இந்த போராட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொள்கிறார்கள். குமரி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்க உள்ளதால் அன்று ஆட்டோக்கள் முழுவதும் இயங்காது என்றனர்.

 

Tags : In Kanyakumari district, 5,000 cars will not run on the 28th and 29th.

Share via