குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய பண்ணை இயந்திரமயமாக்கல் பரப்புரை: நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

by Staff / 06-04-2022 12:46:42pm
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி  மகளிர் கல்லூரியில் தேசிய பண்ணை இயந்திரமயமாக்கல் பரப்புரை: நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஸ்ரீ பராசக்தி  மகளிர்  கல்லூரியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் உயிர் மாற்று தொழில்நுட்ப ஆய்வு  மையமானது விவசாயிகள், பொதுமக்கள், தொழில் முனைவோர் மற்றும் இதர பயனாளிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் மற்றும் அதன் தொழில் நுட்பங்கள் பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடந்த மாதம் 28 ம் தேதி முதல் ஏப்ரல் 4 ம் தேதி வரை ஒரு வார தேசிய பண்ணை இயந்திரமயமாக்கல் பரப்புரை நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் செயல்விளக்க விழா குற்றாலம் ஸ்ரீ பராசக்தி  மகளிர்  கல்லூரியின் கருத்தரங்க அறையில்  நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் ஜெய்நிலா சுந்தரி தலைமை தாங்கினார். இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி பொறியாளர் மற்றும் தலைவர்  சரவணபிரியா அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்கள் தொடர்பாக  செயல்விளக்கம் நடத்தப்பட்டது. 

இதே போல செங்கோட்டை தாலுகா வேம்பநல்லூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் கழிவுகள் மேலாண்மை மற்றும் இயந்திரமயமாக்கல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் பயிர் கழிவுகளை பண்ணை இயந்திரங்கள் மூலம் மீண்டும் நிலத்திற்கு பயனுள்ளதாக மாற்றி தருவதும் அதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் கருத்தரங்கம் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் விஞ்ஞானி அசுதோஷ் பண்டிர்வார் சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டு பயிர் கழிவுகள் மேலாண்மை மற்றும் இயந்திரமயமாக்கல் பற்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன் பெற்றனர். முடிவில் ஸ்ரீ லாவண்யா நன்றி கூறினார்.

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி  மகளிர் கல்லூரியில் தேசிய பண்ணை இயந்திரமயமாக்கல் பரப்புரை: நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
 

Tags :

Share via