உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க மதுரை ரயில் நிலையத்தில் சுங்கடி சேலை விற்பனை துவக்கம்

by Editor / 09-04-2022 07:50:53pm
உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க மதுரை ரயில் நிலையத்தில்  சுங்கடி சேலை விற்பனை துவக்கம்

பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க அருகில் உள்ள ரயில் நிலையங்களில் 15 நாட்களுக்கு உள்ளூர் தயாரிப்புகளை விற்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு கைத்தறி துணிகள் விற்பனை நடைபெற்றது. இந்தத் திட்டத்தை பற்றிய பின்னூட்டம் மற்றும் ஆலோசனைகளை வரவேற்க, இது ஏப்ரல் 8 முதல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதில் முதல் 15 நாட்களுக்கு ஒரு நிறுவனமும் அடுத்த 15 நாட்களுக்கு வேறு நிறுவனமும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த "ஒரு நிலையம் ஒரு பொருள்" என்ற திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் சுங்கடி சேலை விற்பனை துவங்க விருப்ப மனுக்களை சமர்ப்பிக்க மதுரை ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட விருப்ப மனுக்களிலிருந்து  மதுரை பிரபல சுங்கடி சேலை தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் சனிக்கிழமை (09.4.2022) அன்று  காலைசுங்கடி சேலை விற்பனை மதுரை ரயில் நிலையத்தில் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, உதவி வர்த்தக மேலாளர் கே.வி. பிரமோத் குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்து தெரிவித்தனர். பெண் பயணிகள் அதிக அளவில் இந்த கோடை காலத்திற்கு பொருத்தமான சுங்கடி சேலைகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கி வருகின்றனர்.

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க மதுரை ரயில் நிலையத்தில்  சுங்கடி சேலை விற்பனை துவக்கம்
 

Tags :

Share via