மனைவி மகளை அரிவாளால் வெட்டிய கணவன்

by Admin / 01-03-2019
மனைவி மகளை அரிவாளால் வெட்டிய கணவன்

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு கிராமத்தில் மனைவி மகளை அரிவாளால் வெட்டிய கணவன் சம்பவ இடத்திலேயே மனைவி சசிகலா உயிரிழப்பு மகள் பூவிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி . கொலை செய்த கணவன் செல்வராஜை தாடிக்கொம்பு போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச தாய்மொழி தினம் மற்றும் இந்திய கலாச்சார விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் :- ஒருவரின் எண்ணங்களை ஈர்க்க அவருக்கு தெரிந்த மொழியில் பேசவேண்டும், ஒருவரின் மனதை கவரவேண்டுமென்றால் அவரது தாய்மொழியில் பேசவேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இந்த நாட்களில், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மற்றும் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை அறிந்துள்ளதாகவும மேலும் ஒரு புத்தகத்தை இயற்றிய பிறகு எத்தனை ஆண்டுகளாகினும் அதன் பதிப்பில் இருந்து வார்த்தைகளையும் வரிகளையும் மாற்ற முடியாது அதைப்போல் நாம் என்றும் திகழ வேண்டும் என்றும் தெரிவித்துக் கொண்டார். கோவில்பட்டி அருகே விவசாய நிலப் பகுதியில் திடீர் தீ - 700ஏக்கர் பயிர்கள் சேதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் திடீரென தீப்பற்றி எரிவதால் சுமார் 700 ஏக்கர் வரையிலான மக்காச்சோளம், பருத்தி, பாசிப்பயிர் மற்றும் சோள வகைகள் பயிர்கள் சேதமடைந்துள்ளன.. தொடர்ந்து தீ பற்றி எரிந்து வருகிறது. தீ கடுமையாக பரவி எரிந்து வருவதாலூம், நிலங்களுக்குள் செல்ல சரியான பாதை இல்லாத காரணத்தால் தீயை அணைக்க முடியால் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர்.

Share via