பாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா - மதுரை

by Admin / 01-03-2019
பாப்பகுடி ஊராட்சியில்  சுகாதார திருவிழா - மதுரை

மதுரை மாவட்டம் கோவில் பாப்பகுடி ஊராட்சியில் சுகாதார திருவிழா நடைபெற்றது இதில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், ஆகியோர் கலந்துகொண்டனர், விழாவில் கோவில் பாப்பாகுடி ஊராட்சி மக்களுக்கு சுகாதாரத்தை குறித்த விழிப்புணர்வுகள் எடுத்துரைக்கப்பட்டது.

பாப்பகுடி ஊராட்சியில்  சுகாதார திருவிழா - மதுரை

நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மேடையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தமிழ்நாட்டு மக்கள் சுபிட்சமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல திட்டங்களை செயல்படுத்தினார்., ஊராட்சி பகுதிகளில் பொது வினியோக திட்டத்தின் மூலம் பொருட்கள் கிடைக்க 1978 கிராமம் தோறும் 15000 ரேஷன் கடைகள் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்., இந்த அரசு சுகாதாரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை நாட்டிலிலேயே முதன்மையாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது., *மதுரை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 190 சிறப்பு மருத்துவ முகாம் நடத்தபட்டுள்ளது.* *2 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது* மாவட்டத்தில் 187. 28 கோடி மதிப்பீட்டில் கர்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது., இதுவரை இருந்த எந்த அரசியல் செய்யாத விதமாக, பிறந்த குழந்தைக்கான 16 மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டு வருகின்றது., நாட்டில் 162 குழந்தைகள் இருதய நோயால் கண்டறியப்பட்டு, அதில் 141 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது., 20 இலட்சத்து 818 பேர் நாட்டில் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் பேர் பயன் பெற்றுள்ளனர்., நாட்டில் ஒகி, கஜாபுயலின் போது தொற்று நோய்கள் பாதிப்பு ஏற்படாமல், மருத்துவ உதவி சுகாதாரத் துறையினர் செயல்பட்டனர் அவர்களுக்கு எனது பாராட்டும் நன்றியும் தெரிவிக்கின்றேன். *மளிகை கடையிலோ, துணிக்கடையிேலா பொருட்கள் வாங்கும் போது எப்படி பரிசோதித்து வாங்குகின்றோமோ, அது போல இனி வரும் 5 ஆண்டு களில் சிறப்பாக ஆட்சி செய்யும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்...* *மாநில அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி 2 ஆயிரம் வழங்கி வருகின்றது அதே போல் பிரதமர் மோடியிலான மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது.* போன ஆட்சியில் பிள்ளைகள் படிக்க முடியாதவாறு , 8 மணி நேரம், 12 மணி நேரம் மின்சார தடை நிலவி வந்த வேலையில், இந்த அரசு அனைவருக்கும் மின்சாரம் தடையில்லாமல் வழங்கி வருகின்றது என்று பேசினார்