தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இடி மின்னலோடு கனமழை

by Editor / 03-05-2022 09:53:23pm
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இடி மின்னலோடு  கனமழை

சேலம் மாவட்டம் ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதிவேகத்தில் அடித்த சூறாவளி காற்றால் கட்டிடங்கள் மேல் வைத்துள்ள ராட்சச விளம்பர பேனர்கள் கிழிந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் போலீசாரால் வைக்கப்பட்ட பேரிகாடுகள் கீழே விழுந்துள்ளதால் அதை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் துறையூரில்  சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால்  ஆத்தூர் சாலையில் பேருந்து மற்றும் கார் மீது சாலையோர மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.நான்கு மரங்கள் வேரோடு சாய்ந்ததுஇதனைத்தொடர்ந்து விரைந்துவந்த காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆத்தூர் நகரப்பகுதியில் மற்றும் கெங்கவல்லி வீரகனூர் செல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிழும் கனமழை பெய்தது. சேலம் அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, 4ரோடு ,அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது  பலத்த மழை பெய்தது.எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இடி மின்னலோடு  கனமழை
 

Tags :

Share via