போதை மறுவாழ்வு மையத்தில் எலெக்ட்ரிசியன் அடித்து கொலை செய்யப்ட்டதாக மனைவி புகார்.

by Editor / 03-05-2022 09:35:20pm
போதை மறுவாழ்வு மையத்தில் எலெக்ட்ரிசியன் அடித்து கொலை செய்யப்ட்டதாக மனைவி புகார்.

 சென்னை ராயப்பேட்டை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் எலெக்ட்ரீசியன் ராஜ் இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ராஜ் மதுபோதைக்கு அடிமையானதால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மது பழக்கத்திற்கு அடிமையான கணவர் ராஜை மது பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக அவரது மனைவி கலா  ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார். சில நாட்கள் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய ராஜ் மீண்டும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.

 மையத்தின் ஊழியர்கள் கலாவை தொடர்புகொண்டு "உங்கள் கணவர் கீழே விழுந்து விட்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறியுள்ளனர்.மருத்துவமனைக்குச் சென்ற கலா தனது குழந்தைகளுடன் கணவரை பார்க்க முயன்றுள்ளார். ஆனால் மையத்தினர் தடுத்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு பார்த்தபோது ராஜ் இறந்துவிட்டது. தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இறந்து போன ராஜ்ஜிற்கு தலையில் ரத்த காயம் இருந்துள்ளது. உடலிலும் காயங்கள் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி கலா, கணவரை போதை மேறுவாழ்வு மையத்தினர் அடித்து கொலைசெய்து விட்டதாகவும், இதனால் உரிய நடவடிக்கை எடுத்து மையத்திற்கு சீல் வைக்கவேண்டும் என்றும் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போதை மறுவாழ்வு மையத்திற்கு திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் பகலவன், உதவி ஆணையர் பாஸ்கர் மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். அங்கு 19 நோயாளிகள் உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தினர். மையத்தில் இருந்து உடைந்து கிடந்த லத்திகள் உள்ளிட்ட சில பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் போதை மறுவாழ்வு மைய மேலாளர் மோகன், ஊழியர், ஜெகன், பார்த்தசாரதி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் கார்த்திக் தப்பி ஓடிவிட்டதாகவும், அவரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போதை மறுவாழ்வு மையத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக அண்ணாசாலை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via