முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் உயிழந்த கண்ணையா குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடுதொகை

by Admin / 09-05-2022 08:39:51pm
 முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் உயிழந்த  கண்ணையா குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடுதொகை

சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள பக்கிங்காம் கால்வாய் அருகில் ஆர்.ஏ.புரம் இளங்கோ தெருவில் உள்ள 259 வீடுகளும்ஆக்கிரமித்துக்கட்டப்பட்டவீடுகளை அகற்றகோரி பொது நல வழக்குத்தொடுப்பட்டது.நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.சமீபத்தில் தீர்ப்பு  வெளியானது.ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதைத்தொடர்ந்து அரசு தரப்பிலிருந்து அக்கிரமிப்புகளைாஅகற்றும் பணி நடந்து வந்தது.குடியிருப்போருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் வாக்குவாதங்கள் நடந்தன.ஆனாலும்கட்டங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தன.அங்கு வசித்து வந்தோர்க்கு குடிசைமாற்று வாரியத்தின் மூவமாக வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து குரல் எழுப்பியவர்களிலருந்து கண்ணையா என்கிற முதியவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.தொன்னூறுவிழுக்காடு தீக்காயங்களோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டஅவர் சிகிச்சை பலனின்றி உயிர் துறந்தார்.அவர்இறந்த செய்தி அறிந்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் உயிழந்த  கண்ணையா குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடுதொகை வழங்கப்படுமஎன்று அறிவிப்பு வெளியிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, உச்சநீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, நீர்வளத் துறை பணியாளர்கள் ஆர்.ஏ.புரம் காலனியை இடிக்கும் பணிக்காக வந்த பிறகுகண்ணையா,  தீக்குளித்தார். விசாரணைக்கு வரவிருந்த உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரும் வரை வெளியேற்றும் பணியை நிறுத்தி வைக்குமாறு நீர்வளத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via