வடகொரியாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு

by Staff / 13-05-2022 04:25:24pm
வடகொரியாவில் கொரோனாவால்  முதல் உயிரிழப்பு

வட கொரியாவில் கோரணாபெருந்தொற்று முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. வடகொரியாவில் நேற்று முதல் முறையாக  ஒருவருக்கு  ஓமைகாரன் தோற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து .அதிபர் கிம் ஜாங் உன் அங்கு ஊரடங்கு பிரகடனப்படுத்தி உள்ளார். நேற்று 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்ட நிலையில் இன்று 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் காய்ச்சலுக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். சீனா ரஷ்யா போன்ற நாடுகள்கொரோனா  தடுப்பூசி வழங்க முன்வந்தபோதும் வடகொரிய அதனை நிராகரித்து விட்டது இதனால் அங்கு வசிக்கும் இரண்டரை கோடி பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தற்போது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசு  எப்படி கட்டுப்படுத்த  போகிறது என கேள்வி எழுந்துள்ளது.

 

Tags :

Share via