வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி

by Editor / 26-05-2022 08:28:43pm
வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி

 தமிழகத்தில் 31ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 11 தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வரும் வழி எங்கும் "கிங் கம்"  என்கின்ற ஆங்கிலத்தில் ஆன வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
 
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  31,500கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் மோடி  உற்சாகமான வரவேற்புக்கிடையே மேடைக்கு வந்த  பிரதமர் பேசத் தொடங்கினார். தமிழ்நாடு சிறப்பு வாய்ந்த பூமி என்றும் வணக்கம் என தமிழ்  ஆரம்பித்தார் மக்கள் கலாச்சாரம் என அனைத்தும் சிறப்பானவை செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாரதியின் பாடலை மேற்கோள் காட்டி பாடினார் பிரதமர்.

 செவித்திறன் குறைபாடு உடைய ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் பதக்கங்கள் பெற்று பெருமை சேர்த்துள்ளனர் தமிழ்மொழி நிலையானது, தமிழ் கலாச்சார மிகப் பெரியது, சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூர்க் வரை, தமிழ் பரவி உள்ளது.

தமிழக மக்கள், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருவர் சிறந்து விளங்குகிறார். தமிழ் மொழியை மேலும் வளர்க்க மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. பனாரஸ் இந்து பல்கலையில் தமிழ் மொழி படிப்பதற்காக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் மேலும் ஒரு அத்தியாயம் இந்த விழா. தற்போது தொடங்கப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்கள் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமான உலகத்தரம் வாய்ந்த திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன.

சிறப்பான சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் சரி, அந்த துறை சார்ந்த திட்டங்கள் அனைத்தும் அனைவரையும் சென்று சேர்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம்.

அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள சேவை கிடைக்கும்படி செயல்படுகிறோம். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள தற்போதைய நிலை உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். இந்தியா, இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் அளித்து வருகிறது.

ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி
 

Tags : Prime Minister Modi started his speech by saying hello in Tamil

Share via