தமிழகத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்க தெற்கு ரயில்வேநடவடிக்கை

by Editor / 31-05-2022 09:55:49pm
தமிழகத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்க தெற்கு ரயில்வேநடவடிக்கை

ரயில்களை பாதுகாப்பாக இயக்க பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக  ரயில் பாதை மற்றும் சாலைகள் சந்திக்கும் இடங்களில் விபத்துக்கள் அதிகமாக நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியவை அமைக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே பகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளில் 92 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.  ரயில் மற்றும் சாலை சந்திப்புகளில் உள்ள ஆளில்லாத ரயில்வே கேட்டுகள் மற்றும் பணியாளர் உள்ள ரயில்வே கேட்டுகள் இருந்து வந்தன. 

ரயில்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும், இயக்க   ஆளில்லாத ரயில்வே கேட்டுகள் மற்றும் பணியாளர் உள்ள ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு  கடந்த 8 ஆண்டுகளில் 639 ஆளில்லாத ரயில்வே கிளாஸிங்குகள் மாற்று ஏற்பாடுகளுடன் மூடப்பட்டுள்ளது. 

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே 100% ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகள் மூடப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  மேலும் 262 பணியாளர் உள்ள ரயில்வே கேட் களும் மூடப்பட்டன. ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Tags : Southern Railway operation to run trains safely in Tamil Nadu

Share via