முட்டை ஆம்லெட் செய்முறை

by Admin / 10-08-2021 11:27:19am
முட்டை ஆம்லெட் செய்முறை

தேவை

முட்டை – 4

சிறிய வெங்காயம் – 50 கிராம்

பச்சை மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகு, சீரகத்தூள் – தலா 1 டீஸ்பூன்

செய்முறை

முட்டைகளை உடைத்து அடித்துக கொள்ளவும். சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை அம்மியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். அடித்து வைத்துள்ள முட்டையில், மஞ்சள், மிளகு, சீரகதூள், வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, உப்பு முதலியவற்றை நன்றாக கலந்து தோசை கல்லில் சிறுசிறு தோசைகளாக ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும். சூடாக பரிமாறவும்.

 

Tags :

Share via