குற்றால அருவிகளில் களைக்கட்டிய சீசன் -அலைமோதிவரும் சுற்றுலாப்பயணிகள்

by Editor / 16-07-2022 12:03:29pm
குற்றால அருவிகளில் களைக்கட்டிய சீசன் -அலைமோதிவரும் சுற்றுலாப்பயணிகள்

தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை சீசன் காரணமாக இங்கு அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு  தண்ணீர் வரத்து அதிகமாக இருந்து வருகிறது.இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகக் குற்றால அருவிகளான மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் சிற்றருவி புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் இன்று காலை வரை சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் தாக்கம் குறைந்ததால் அருவிகளில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து அதிகாலை முதலே அருவிகளில் குளிப்பதற்கு அனுமதியளிக்கபட்டதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும், இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மெயின் அருவி பகுதியில் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் அருவி பகுதியில் உள்ள பாதுகாப்பு வளையத்தில் மதுபோதையில் ஆபத்தை அறியாமல் ஏறி சுற்றுலாப் பயணிகள் குத்தாட்டம் போட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

 
 

 

Tags : Weedy season at Kortala Falls - waves of tourists

Share via