முனைவர் பட்டமும்,முதுநிலைபட்டமும் பெற்று சாரல் திருவிழாவை கலக்கிய கரகாட்ட கலைஞர்கள் 

by Editor / 11-08-2022 12:07:17am
முனைவர் பட்டமும்,முதுநிலைபட்டமும் பெற்று சாரல் திருவிழாவை கலக்கிய கரகாட்ட கலைஞர்கள் 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் சாரல் திருவிழா நடத்தப்படாமல் இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சீசன் காலம் என்பதால் குளுமையான நிலை குற்றாலம் பகுதியில் நீடித்து வருவதால் இந்த ஆண்டு சாரல் திருவிழா வெகுவிமரிசையாக நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. இந்தாண்டு சாரல் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. இந்தாண்டு சாரல் திருவிழா,புத்தகத்திருவிழா உணவுத் திருவிழா, தோட்டக்கலை திருவிழா, என நான்கு திருவிழாக்கள் வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஆறாவது நாளான இன்று குற்றாலம் கலைவாணர் அரங்கில் சாரல் திருவிழாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் கலைக் குழுவினரின் சார்பில் பார்வையாளர்கள் மாடத்தில் தலையில் அடுக்கு பானைகளை வைத்து அதில் தீப்பந்தம் வைத்து நாட்டியமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள்,சுற்றுலாப்பயணிகள், கண்டுகளித்து கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர், இதேபோன்று மேடையில் நடைபெற்ற கரகாட்ட கலை நிகழ்ச்சிகள் கலைஞர்களையும் கூடியிருந்த பொதுமக்கள் அவர்கள் கலைத் திறனையும் பாராட்டி கர கோசங்களை எழுப்பினர், மேடையில் கரகம் ஆடிய  விளையாடிய மூன்று வாலிபர்களில் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றவர்,மற்ற  இரண்டு நபர்களும் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முனைவர் பட்டமும்,முதுநிலைபட்டமும் பெற்று சாரல் திருவிழாவை கலக்கிய கரகாட்ட கலைஞர்கள் 
 

Tags :

Share via