215 கோடி மோசடி: குற்றவாளியாக சேர்கப்பட்ட நடிகை

by Editor / 17-08-2022 01:49:41pm
215 கோடி மோசடி: குற்றவாளியாக சேர்கப்பட்ட நடிகை

215 கோடி மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.215 கோடி நிதி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் அமலாக்கத்துறை (ED) வழக்குப்பதிவு செய்துள்ளது. பிரபல மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர் முக்கிய குற்றவாளியாக உள்ள வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் சிக்கியுள்ளார். நடிகை மீதான குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை குழு நீதிமன்றத்தில் சமர்பித்தது.

சுகேஷ் சந்திரசேகரின் மோசடி வருமானத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பயனடைந்தார் என்று அமலாக்கத்துறை கண்டறிந்தது. சுகேஷ் ஒரு மோசடி நபர் என்பது ஏற்கனவே தங்களுக்குத் தெரியும் என்றும் விசாரணைக் குழு கூறுகிறது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் நடிகையிடம் பலமுறை விசாரித்தனர். மோசடி வழக்கில் கைதான சுகேஷ், நடிகைக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நடிகையின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனர் ஷிவிந்தர் சிங்கின் குடும்பத்தை மிரட்டி ரூ.215 கோடி பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் முன்பு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது மனைவியும் நடிகையுமான லீனா மரியா பால் கைது செய்யப்பட்டார்.

சிறையில் உள்ள ஷிவிந்தர் சிங்குக்கு ஜாமீன் ஏற்பாடு செய்வதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் சுமார் ரூ.215 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் சட்ட விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி போல் நடித்து அதிதி சிங்கிடம் பணம் வாங்கினார். சுகேஷ் டெல்லி சிறையில் இருந்த போது இந்த பெரும் மோசடிகளை செய்துள்ளார்.

சுகேஷ் மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவற்றை மத்திய மற்றும் மாநில அமைப்புகள் விசாரித்து வருகின்றன. அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் பல்வேறு மாநில காவல்துறை போன்ற மத்திய அமைப்புகள் வழக்குப் பதிவு செய்துள்ளன.
 

 

Tags :

Share via