காவல்துறைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ஓர் கலந்தாய்வு நிகழ்ச்சி . 

by Editor / 20-07-2019 10:35:35pm
காவல்துறைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ஓர் கலந்தாய்வு நிகழ்ச்சி . 

        தென்காசிகாவல்துறைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ஓர் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

காவல்துறைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ஓர் கலந்தாய்வு நிகழ்ச்சி . 

பசியில்லா_தென்காசி -மூலம்


நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசி காவல்துறை ஆய்வாளர் திரு.ஆடிவேல்  தலைமை தாங்கி ஆட்டோ ஓட்டுனர்களுடன் கலந்துரையாடினார்கள்.  

  • விபத்தில்லா-தென்காசியை உருவாக்குவது பற்றியும்
  • ஆட்கள் அதிகமாக ஏற்றாமல் இருப்பது குறித்தும்
  • மோட்டார் வாகன சட்டத்தை மதிப்பது பற்றியும்
  • முதலுதவி செய்வது பற்றியும்
  • பெருகிவரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது பற்றியும் 
  • பள்ளிக்குழந்தைகளை அதிகமாக ஏற்றாமல் இருப்பது பற்றியும்

-கலந்துரையாடப்பட்டது.


நிகழ்ச்சியில் நேஷனல் பப்ளிக்பள்ளி தாளாளர் அப்துல் அவர்களும், வழக்கறிஞர்- அயூப் அவர்களும், தென்காசி சாரல் இரத்ததானக் கழகம் நிறுவனர் -அன்சாரி அவர்களும், NFS TRUSTகோபி மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

ஓட்டுனர்களின் மன அழுத்தத்தை குறைக்க வழிமுறைகளை பற்றி மனவளக்கலை நிபுணர்- உவைஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சி சிறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்காசி காவல்துறை மற்றும் பசியில்லா தென்காசி சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.