தர்மபுரியில் பயிர்களை அழித்து காட்டு மாடுகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

by Admin / 13-11-2018
தர்மபுரியில் பயிர்களை அழித்து காட்டு மாடுகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகில் சேர்வராயன் மலைத்தொடர் உள்ளது.

தர்மபுரியில் பயிர்களை அழித்து காட்டு மாடுகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

இரவு நேரங்களில் அங்கிருந்து காட்டு மாடுகள் மற்றும் மான், காட்டுப்பன்றி உள்ளிட்டவை கிராமப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விடுகிறது. அங்குள்ள கரும்பு, வாழை, நெல், மரவள்ளி, மக்காச்சோளம் ஆகியவற்றை அழித்து நாசப்படுத்தி வருகிறது. இதனால் பயிரிட்ட விவசாயிகள் இரவு நேரங்களில் அங்கு காவல் இருந்து வருகின்றனர். அவ்வாறு இருந்தபோதும் வேறு பகுதியில் மேய்ந்து விட்டு செல்கிறது. அவற்றை விரட்ட முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். சில நேரங்களில் ஊருக்குள் புகுந்து விடுவதால் மக்கள் பீதியுடனே உள்ளனர். வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தபோதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், விவசாயிகள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏரிப்பகுதிக்குள் நுழைந்த காட்டு மாடுகளை பொதுமக்கள் விரட்டி அடித்தனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறையினர் அலட்சியப்படுத்தாமல் காட்டு மாடுகளை விரட்டும் நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.