சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்

by Editor / 22-07-2019 02:13:33am
சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்

இதுவரை நிலவில் எந்த உலக நாட்டுத் விண்கலமும் இறங்காத தென் துருவப் பகுதியில் சந்திரயான்-2 விண்கலம் முதன்முதல் இறங்கப் போகிறது.

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்

   சந்திரயான்-2 விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15-ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு. ‘கவுண்டவுனும்’ நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் திடீரென கோளாறு ஏற்பட்ட காரணத்தினால் கடைசி நிமிடத்தில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஏவுவது நிறுத்தி வைக்கப்பட்டது. விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் அந்த கோளாறை சரி செய்து விட்டனர். இதையடுத்து இன்று ‘சந்திரயான்-2’ விண்கலத்துடன், ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.இதன்படி, ‘சந்திரயான்-2’ விண்கலம் வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது. இதனை தொடர்ந்து, ‘சந்திரயான்-2’ விண்கலம் இறங்குவதற்கான முதற்கட்டம் வெற்றி பெற்றுள்ளது. சிறப்புடன் நீள் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையை மதியம் 2.43 மணிக்கு சந்திரயான் 2 ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு 16-ஆவது நிமிடத்தில் புவி வட்டப் பாதையை சென்றடைந்தது.

சந்திரயான் – 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி இந்த  திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட். சந்திரயான் 2 விண்கலம் புவிசுற்றுவட்டப் பாதையில் சென்றடைந்தது இது வரலாற்றில் முக்கியமான நாள்

சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 2 கால் பதிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது .வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று அடுத்தடுத்து பல செயற்கைகோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் சிவன் கூறினார்.

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம்.நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்யவுள்ள சந்திரயான்-2 தனித்தன்மை வாய்ந்தது.- பிரதமர் மோடி.

சந்திரயான்-2 வெற்றியின் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அடைய வாழ்த்து-இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு -குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு.

Share via