இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு - கனிமொழி எம்.பி.,

by Staff / 16-09-2022 01:51:34pm
இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலம் தமிழ்நாடு - கனிமொழி எம்.பி.,

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் 66 பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டது. இதனை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, "1920ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியின் போது சென்னையில் ஓரு பள்ளியில் உணவு திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் காமராஜர் அதை விரிவுப்படுத்தினார். 1989-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் 5 முட்டையுடன் வழங்கப்பட்டது. தற்போது காலை உணவு திட்டம் உலகத்திற்கே வழிகாட்டும் உன்னதமான திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எல்லா துறையிலும் விளங்கி வருகிறது" என்று கூறினார்.

 

Tags :

Share via