ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தீர்மானம் போட்ட முதல்வர்

by Staff / 18-09-2022 05:39:37pm
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தீர்மானம் போட்ட முதல்வர்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது. தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வருகிற 22-ந்தேதி வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த மாநில காங்கிரஸ் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை முதல்-மந்திரி அசோக்கெலாட் முன்மொழிந்தார். இதை அனைவரும் ஏற்று கொண்டனர். இதனால் ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

 

Tags :

Share via