நடிகர் போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Staff / 22-09-2022 03:22:41pm
நடிகர் போண்டா மணியை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், காலை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் உள்ள பரம்பரை சித்தா ஆயுர்வேதம் ஹோமியோபதி மருத்துவர்களுக்கு 60 வயதை கடந்த மருத்துவர்களுக்கு உதவித் தொகையை அதிகரித்து வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த 61 பரம்பரை மருத்துவர்களுக்கு உதவித்தொகையை அதிகரித்து வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் தான் இந்த உதவித்தொகை 3000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்ட பின் சட்டத்துறை மூலம் ஆளுநர் ஒப்புதல் வேண்டி அவரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு சித்த மருத்துவ சட்ட மசோதா முரண்பாடு இல்லை என விரிவான விளக்கம் ஆளுநரின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சித்த பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர் அனுமதி அளிப்பர் என்று எதிர்பார்க்கபடுகிறது.

போண்டா மணி நான்கு மாதங்களுக்கு முன் இங்கு அனுமதிக்கப்பட்ட போது மருத்துவர்களிடம் சொல்லி சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் உள்ளார். விரைவில் டயாலிசிஸ் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீரகம் தேவைப்பட்டால் மாற்று சிறுநீரகம் பொறுத்த அவர்கள் குடும்பத்தாரிடம் விசாரிக்க சொல்லி இருக்கிறோம். அரசு சார்பில் உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிய சொல்லி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via