ரவுடிகளை ஒடுக்க மாஸ்டர் பிளான் போட்ட காவல்துறை.

by Staff / 26-09-2022 11:49:41am
ரவுடிகளை ஒடுக்க மாஸ்டர் பிளான் போட்ட காவல்துறை.

தமிழகத்தில் 2012ம் ஆண்டு நிலவரப்படி 16ஆயிரத்து 502 ரவுடிகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க ஏ, ஏ-பிளஸ், பி, பி-பிளஸ் என பல்வேறு பிரிவுகளாக பிரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், பிணையில் வெளியே வந்த கொலைக் குற்றவாளிகளை கண்காணிக்க "பருந்து" என்ற செயலியை தமிழக காவல்துறை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் தற்போதைய நிலையை அறியவும், அவர்களின் குற்றச் செயல்கள், பழிக்குப்பழி கொலைகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்களின் நடத்தையைக் கண்காணித்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் "பருந்து" செயலி உதவும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via