அக்டோபர் 1 முதல் மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் சில ரயில்களின் புதிய கால அட்டவணை!

by Editor / 30-09-2022 10:48:51pm
அக்டோபர் 1 முதல் மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் சில ரயில்களின் புதிய கால அட்டவணை!

மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் சில ரயில்களின் புறப்படும் நேரங்கள் அக்டோபர் 1 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06668) திருநெல்வேலியில் இருந்து காலை 07.35 மணிக்கு பதிலாக காலை 07.30 மணிக்கும், தூத்துக்குடி - மணியாச்சி சிறப்பு ரயில் (06671) தூத்துக்குடியில் இருந்து காலை 08.30 மணிக்கு பதிலாக காலை 08.25 மணிக்கும், மற்றொரு தூத்துக்குடி - மணியாச்சி சிறப்பு ரயில் (06847) தூத்துக்குடியில் இருந்து இரவு 10.45 மணிக்கு பதிலாக இரவு 10.10 மணிக்கும், ராமேஸ்வரம் - புவனேஸ்வர் விரைவு ரயில் (20895) ராமேஸ்வரத்தில் இருந்து காலை 08.50 மணிக்கு பதிலாக காலை 08.40 மணிக்கும், ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 04.30 மணிக்கு பதிலாக மாலை 04.20மணிக்கும், தஞ்சாவூர் வழியாக  இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16852) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 05.25 மணிக்கு பதிலாக மாலை 05.20 மணிக்கும், ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் (06656) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு பதிலாக மாலை 06.00 மணிக்கும், திருச்சி வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் விரைவு ரயில் (16617) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 07.25 மணிக்கு பதிலாக இரவு 07.10 மணிக்கும், ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் (22662) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 08.25 மணிக்கு பதிலாக இரவு 08.20 மணிக்கும் புறப்படும்.

 

Tags :

Share via