தமிழகத்தில் புதிதாக 1,771 அரசு பேருந்துகள்.

by Editor / 10-10-2022 09:51:15pm
தமிழகத்தில் புதிதாக 1,771 அரசு பேருந்துகள்.

தமிழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.இந்த அறிவிப்பில் மின்சார பேருந்துகளும் அடங்கும். அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு புதிதாக 1,771 பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில்  வாங்கப்பட உள்ள  1,771 பேருந்துகள் பிஎஸ்-4 ரக பேருந்துகள்என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த பேரூந்துக்கள் கீழ்கண்ட மண்டலங்களுக்கு பிரித்து வழங்கபபட உள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும் ,சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோவை மண்டலத்திற்கு 115 பேருந்துகளும், கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், மதுரை மண்டலத்திற்கு 251 பேருந்துகளும், நெல்லை மண்டலத்திற்கு 50 பேருந்துகளும் வழங்கப்படஉள்ளதாக கூறப்ப
டுகிறது. இந்த பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via