முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் 5ஜி-ஐ ஆதரிக்கும் மென்பொருள் இல்லை

by Editor / 11-10-2022 10:32:34pm
முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் 5ஜி-ஐ ஆதரிக்கும் மென்பொருள் இல்லை

ஆப்பிள், சாம்சங் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் 5ஜி-ஐ ஆதரிக்கும் மென்பொருள் இல்லை. ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5ஜி தொழில்நுட்பத்திற்கான மென்பொருளை அனைத்து ஐபோன்களுக்கும்(5ஜி சேவை பொருந்தக்கூடிய போன்கள் மட்டும்) ஆப்பிள் நிறுவனம் இன்னும் புதுப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் அதிகாரிகள் புதன்கிழமை ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் வெளிநாட்டு நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங், விவோ மற்றும் சியோமி மற்றும் உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவற்றின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் 5ஜி அதிவேக இணையதள சேவையை மொபைல் போன்களில் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அப்டேட் விரைவில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via