பிரதமர் நரேந்திரமோடி அயோத்தியில் ராமர் கோவிலில் வழிபாடு

by Writer / 24-10-2022 01:56:58am
பிரதமர் நரேந்திரமோடி அயோத்தியில் ராமர் கோவிலில் வழிபாடு


பிரதமர் மோடி தீபாவளி திருநாளை முன்னிட்டு உத்திரபிரதேசத்திலுள்ள அயோத்தில்ஓடும் ஜீவநதியான சரயு நதிக்கரையில் ,15.76 தீபவிளக்குகளை ஏற்றும் தீப ஒளி திருநாள் கோலாகலமாகக்கொண்டாடப்பட்டது.அவாத் பல்கலைகழகத்தின் ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த சாதனையை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினர். பிரதமர் விழாவை தொடங்கி வைத்தவுடன் 15.76 லட்சத்திற்கும் அதிகமான மண் விளக்குகள்ஏற்றப்பட்டன.பிரதமர் மோடி,உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னதாக பிரதமர் மோடிராமர்கோவிலுக்குச்சென்று சாமிதரிசனம் செய்தார்.ராமெஜன்மபூமி ராதயாத்திரை அத்வானி 1992ல் தொடங்கியபொழுது அதற்கு உறுதுணையாக இருந்தவர்.மோடி..அப்போது, அவர் குஜராத் மாநில பா.ஜ.க.வின்பொதுச்செயலாளராக இருந்தார்.அப்பொழுது ,மோடி அயோத்தியில் ராமர்கோவில் கட்டினால் மட்டுமே அயோத்திக்கு வருவேன் என்று கூறியிருந்தார்.இப்பொழுது ராமர் கோவில் நிர்மானம் முடியும்நிலையில்,அங்கு அவர் வழிபாடு செய்துள்ளா ர் . இந்நிகழ்வு.அதிகமான மண் விளக்குகளை ஏற்றி 'பெரிய எண்ணெய் விளக்குகள்' என்ற புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி அயோத்தியில் ராமர் கோவிலில் வழிபாடு
 

Tags :

Share via