காந்தி கிராமப்பல்கலைக்கழக36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டாா்.

by Admin / 11-11-2022 06:04:33pm
காந்தி கிராமப்பல்கலைக்கழக36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டாா்.


காந்தி கிராமப்பல்கலைக்கழக36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதற்குமுன்பு பெங்களூரூவில் -மைசூரில்...இன்று காலை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்து, தனிவிமானம் மூலம்மதுரை விமான   நிலையம் வந்தார் .அவரை அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,முன்னாள்முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்  இருவரும் பிரதமரைசந்தித்தனர்.தனித்தனியாக ஐவராக இருந்த இருவரயும் அருகில்அழைத்து பிரதமர்  வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் அன்பாத்துரை ஹெலிபேட்டில் இறங்கினார்.அவரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னியின் செல்வன் ஆங்கில பதிப்பு நூலைவழங்கி வரவேற்றார்.அவருடன் அமைச்சர்.ஐ.பெரியசாமி வரவேற்றார்.முதலமைச்சரின் கானவயை அடுத்து பிரதமரின்பாதுகாப்பு   வாகனங்களுடன் பிரதமர் காரில் பயணித்து செல்சகயில்,திடீரென்று காரின் வெளயே நின்றபடி சாலைகளின்இருமருங்கிலும் நின்ற தொண்டர்கள்,பொதுமக்களைப்பார்த்து உற்சாகமாக   கையசைத்தப்படியே வந்தார்.பல்கலைக்கழகத்திற்குச்சென்ற பிரதமர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தி..பூரணகும்ப மரியாதையுடன்விழா மேடைக்கு வந்தார்.பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்கர் அண்ணாமலை நிகழ்ச்சி தொடக்க உரை நிகழ்த்த..வேந்தர் குல்மீத் சிங் வரவேற்றார்.பின பிரதமர் தங்கபதக்கம் வென்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.அடுத்து மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும்கெளரவ டாக்கர் பட்டம் வழங்கினர்.தமிழக முதல்வர் உரைநிகழ்த்தினார்.அவர் பிரதமரிடம் கல்வியை மீண்டும் மாநிலபட்டயலுக்குக்கொண்டுவர கேட்டுக்கொண்டார்.அடுத்து பிரதமர் உரைநிகழ்த்தினார்.அவர்,பட்டம் பெற்ற மாணவர்களையும் பெற்றோர்களையும் வாழ்த்தியதோடு காந்தியின்எளிமையான கிராம வாழ்ககையின் சிறப்பையும் கிராமங்களின் ஆன்மா .நகரங்களின் வளர்ச்சி என்று தமிழில் இடையே தொடரை கூறியதோடு காசியில் தமிழ்ச்சங்கமம் சிறப்பாகக்கொண்டாடப்படும் என்றார்.பின்னர் சாலைவழியாக மதுரை நோக்கி காரில் சென்றார்.

காந்தி கிராமப்பல்கலைக்கழக36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டாா்.
 

Tags :

Share via