ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

by Staff / 26-11-2022 04:55:11pm
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்திற்கான தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது. 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது. இம்முறை, ஆன்லைன் கேமிங், கேசினோ மீதான ஜிஎஸ்டியை 28 சதவீதமாக உயர்த்துவது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழு இது தொடர்பான அறிக்கையை விரைவில் ஜிஎஸ்டி கவுன்சிலில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via