சரக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 1, 391 பேருக்கு ரூ. 24 லட்சம் அபராதம்

by Staff / 21-12-2022 02:36:32pm
சரக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 1, 391 பேருக்கு ரூ. 24 லட்சம் அபராதம்

சேலம் சரக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த வாகன ஆய்வாளர்கள் வாகன சோதனை நடத்தி விதிமுறைகளை மீறி வரும் வாகனங்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த மாதம் சேலம் சரகத்திற்குட்பட்ட ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்.
இதில் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கியது உள்ளிட்ட விதிமுறைகளை மீறி 1, 391 வாகனங்கள் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.இந்த சோதனை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி கடந்த மாதம் (நவம்பர்) சேலம் சரகத்திற்குட்ட பல இடங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டது.அதில் விதிமுறைகளை மீறி இயக்கிய கார், மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோ, லாரி உள்ளிட்ட மொத்தம் 1, 391 வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வாகன உரிமையாளர்களுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த மாதம் சாலை விபத்தில் உயிர் இழப்பை ஏற்படுத்திய 38 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Tags :

Share via