ஆம்னி பேருந்துகள் விலை உயர்வு

by Staff / 26-12-2022 11:51:22am
ஆம்னி பேருந்துகள் விலை உயர்வு

விடுமுறை முடிந்து ஜனவரி 1ம் தேதி சென்னை திரும்புவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மதுரையில் இருந்து சென்னை திரும்புவதற்கு சுமார் ரூ. 700 முதல் ரூ. 1000 என்ற வழக்கமான கட்டணமானது, ஜனவரி 1ம் தேதி அன்று 2,900 வரை உயர்ந்துள்ளது.
கோவையில் இருந்து சென்னை திரும்புவதற்கு ரூ.1300 என்ற வழக்கமான கட்டணம், ஜன.1ம் தேதிக்கு ரூ. 3000 வரை உயர்ந்துள்ளது. நெல்லையில் இருந்து சென்னை திரும்ப சுமார் ரூ. 2400 - 2700 என்ற வழக்கமான கட்டணம், ஜன.1ல் ரூ. 3,500 முதல் ரூ. 4,500 வரை உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via