2 கோடி மதிப்புள்ளான நகை பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது -நெல்லை எஸ்.பி.

by Editor / 29-12-2022 10:56:40pm
 2 கோடி மதிப்புள்ளான நகை பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது -நெல்லை எஸ்.பி.

நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் இன்று நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:

நெல்லை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு திருடப்பட்ட 2 கோடி மதிப்புள்ளான நகை பணம் மற்றும் பொருட்களை இழந்த 254 நபர்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் இருந்து 70% பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகமான மீட்பு சதவீதமாகும்.தென் மாவட்டங்களில் நெல்லை மாவட்டத்தில்தான் சாலை விபத்துக்கள் குறைவாக நடந்துள்ளது.2022 ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நன்னடத்தை பிணையை மீறியவர்கள் 48 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் முக்கியமான இடங்களில் 2073 சிசிடிவி கேமராக்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.கொலை போக்ஸோ வழக்குகள் வன்கொடுமை வழக்குகள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்ட 355 நபர்களுக்கு நிவாரணத்தொகை 2.81 கோடி வழங்கப்பட்டுள்ளது..2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிர ரோந்து பணியின் அடிப்படையில் 182 கிலோ கஞ்சா, முப்பதாயிரம் கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்தார்.

 

Tags :

Share via