தமிழகத்தில் இன்று மதுரை, கோவை, திருச்சி உட்பட 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்.

by Editor / 18-01-2023 09:02:37am
தமிழகத்தில் இன்று மதுரை, கோவை, திருச்சி உட்பட  6 நகரங்களில் ஜியோ  5ஜி சேவை தொடக்கம்.

இந்தியாவில் தொழில்நுட்பத்தில் அடிமட்ட அளவில் புரட்சியை ஏற்படுத்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 5ஜி சேவை கடந்த ஆண்டு தொடங்கபட்டது. முதலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு போன்ற நாட்டின் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் படிப்படியாக நாட்டின் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 7 மாநிலத்தில் 16 புதிய நகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் திருப்பூர், ஆந்திரா மாநிலத்தில் காக்கிநாடா, கர்னூல் நகரங்களில், அசாமில் சில்சார் நகரத்தில், கர்நாடக மாநிலத்தில் ஷிவமொக்கா, தாவணகெரே, ஹோஸ்பேட், பிதார், கடக்-பேத்தகிரி ஆகிய நகரங்களிலும், கேரளாவில் கன்னூர், கொட்டயம், பாலக்காடு நகரங்களிலும், தெலுங்கானாவில் கம்மம், நிஜாமாபாத், உத்தரப்பிரதேசத்தில் பரேலி ஆகிய நகரங்களில் இன்று ஜியோ 5 ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.


இது குறித்து ஜியோ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜியோ 5 ஜி சேவையைத் துரிதமாக வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்த மாநிலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 700 MHz,3500 MHz மற்றும் 26 GHz பேண்ட்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு 700 MHz பேண்டில் sub-GHz spectrum வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ செயல்படுகிறது என்று கூறினார்.

இதன் மூலம், ஜியோவின் 5ஜி சேவை அமல்படுத்தப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி உட்பட  6 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via