கோவை-சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயில் நாளை கோவை-காட்பாடி வரை மட்டுமே இயக்கம். 

by Editor / 23-01-2023 10:16:37pm
கோவை-சென்னை இன்டர்சிட்டி விரைவு ரயில் நாளை கோவை-காட்பாடி வரை மட்டுமே இயக்கம். 

காட்பாடி-அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, கோவை-சென்னை இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயில் இருமார்க்கத்திலும் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.காட்பாடி-அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான வாலாஜா சாலை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் கோவை-சென்னை இடையிலான இன்டர்சிட்டி விரைவு ரயில் இருமார்க்கத்திலும் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 12680 கோவை – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில், கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜன.24) காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு காட்பாடி ரயில் நிலையம் வரை மட்டும் பகுதியாக இயக்கப்படும். காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படாது.

வண்டி எண் 12679 சென்னை-கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி.24) பகல் 2.30 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக, காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை ரயில் நிலையம் சென்றடையும். அதாவது காட்பாடியில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4.20 மணிக்குப் புறப்பட்டு இரவு கோவை சென்றடையும். சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via