நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

by Editor / 31-01-2023 09:09:03am
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று  தொடங்குகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றி தொடக்க உரை நிகழ்த்துகிறார். அதன் பிறகு சமூக, பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இந்த நாடாளுமன்ற அமர்வுகள் 2 கட்டங்களாக நடைபெறும். மேலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Tags :

Share via