தமிழக அரசின் கடன் சுமை அதிக அளவில் உள்ள சூழலில், தற்போது பேனா நினைவுச் சின்னம் அமைப்பது முக்கியமா?-வசீகரன்

by Editor / 15-02-2023 11:07:36pm
தமிழக அரசின் கடன் சுமை அதிக அளவில் உள்ள சூழலில், தற்போது பேனா நினைவுச் சின்னம் அமைப்பது முக்கியமா?-வசீகரன்

தமிழக அரசின் கடன் சுமை அதிக அளவில் உள்ள சூழலில், தற்போது பேனா நினைவுச் சின்னம் அமைப்பது முக்கியமா?- தமிழக ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் கேள்வி.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் உலக அளவில் இந்தியா முதன்மை நாடாக உருவாக்க வேண்டும் என்பதற்காக மேக்கிங் இந்தியா நம்பர் ஒன் என்ற திட்டம் ஆம் ஆட்சி கட்சியால் அறிமுகம் செய்யப்பட்டது.

 அதன் அடிப்படையில், தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் திருச்சி முதல் கன்னியாகுமரி வரை மேக்கிங் இந்தியா நம்பர் ஒன் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஒருங்கிணைக்கும் வகையில் வெற்றி நடை பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நடை பயணமானது, இன்று தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்த சூழலில், ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மேக்கிங் இந்தியா நம்பர் ஒன் திட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு தமிழக ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது-

தமிழக அரசு கலைஞரின் பேனாவை கடலில் வைக்கப் போவதாக கூறி கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது. தமிழக அரசு கடன் சுமையில் உள்ள சூழலில், இது போன்ற திட்டம் தேவையா எனவும் கேள்வி எழுப்பினார்.

கலைஞரையும், பேனாவையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. குறிப்பாக, மன்னர் ஆட்சியில் தான் ஆட்சியில் தான் இருந்தன் அடையாளத்தை உருவாக்குவது போல் சின்னங்கள் வைக்கப்படும். அப்படி தான், இப்போது மன்னராட்சி போல் கடலில் பேனா சின்னம் அமைக்க முயற்சி செய்கிறார்கள்.

தமிழக அரசு தற்போது கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்ற முடியாத உள்ள சூழலில், இப்போதைய சூழ்நிலையில் இது தேவையா என யோசிக்க வேண்டும். 

அரசியல் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அதனை தண்டிக்க கூடிய லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழக அரசு ஞாபகம் வைத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலமானது மத்திய அரசின் சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது.

 அதனை உடனே மத்திய சுற்றுலா தளங்களில் பட்டியலில் கொண்டுவர தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இறக்குமதி செய்யப்பட்ட தலைவராக உள்ளார். அரசியலில் அவர் இன்னும் எல்கேஜியாகவே உள்ளார்.

தற்போது மத்தியில் மக்களுக்கான ஆட்சி நடக்காமல் அத்வானிக்கும், அம்பானிக்கும் நடக்கும் ஆட்சியாகவே தற்போதைய ஆட்சி உள்ளது என விமர்சனம் செய்தார். 

 

 

Tags :

Share via