போலி செய்தியாளர்கள் கைது.

by Editor / 04-03-2023 11:36:29pm
போலி செய்தியாளர்கள் கைது.

தமிழகத்தில் நாளுக்குநாள் போலிநிருபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.இந்த போலி நிருபர்களால் சமூக விரோதச்செயல்கள் அதிகரித்து வருகிறது.மதுப்பாட்டில் கடத்தல்,புகையிலைப்பொருட்கள் கடத்தல்,கட்டப்பஞ்சாயத்து,பெரிய நிறுவனங்களில் பொருட்களை கடன் வாங்கிக்கொண்டு பணத்தை  கொடுக்காமல் மிரட்டுவது..பொய்யான தகவல்களை பரப்பி பணம் பறிப்பது..நிலமோசடிக்கு பயன்படுத்துவது என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே பனைமடலை சேர்ந்த விவசாயி திருமுருகன், 43. இவர், 2018 டிச., 20ல் மண் ணெண்ணெய் வாங்கிச்சென்றார். அப்போது, ஆத்துாரை சேர்ந்த நேகுஜி, 39, கண்ளான், 30, ஆகியோர், திருமுருகனிடம் நிருபராக நடித்து, மண்ணெண்ணெய் கடத்துவதாக செய்தி வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். அப்போது, 10 ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும், பின்  5 ஆயிரம் வாங்கிக்கொண்டதோடு மிரட்டல் விடுத்ததாகவும், திரு முருகன் புகார்படி ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது நேற்று, நேருஜி, கண்ணனுக்கு தலா, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட் முனுசாமி உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் செல்வி என்பவரிடம் செய்தியாளர் என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த போலி நிருபர் திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via