கடையநல்லூரில் வெளி மாநிலத்தவர்கள் அச்சமின்றி வேலை செய்ய கடையநல்லூர் காவல்துறை முழு பாதுகாப்பு

by Editor / 06-03-2023 09:47:24pm
கடையநல்லூரில் வெளி மாநிலத்தவர்கள் அச்சமின்றி வேலை செய்ய கடையநல்லூர் காவல்துறை முழு பாதுகாப்பு

தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதிகம் பகிரப்பட்ட இந்த வீடியோக்கள், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கவனம் வரை சென்ற நிலையில், தனது டிவிட்டர் பதிவில் அவர் கவலை தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையில்  எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்தப் பிரச்னையை நேரில் ஆராய தமிழ்நாட்டிற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார். இதன்தொடர்ச்சியா அந்தக்குழுவினரும் இங்குவந்து பார்வையிட்டனர்.இந்தநிலையில் தமிழ்நாட்டின் முதல்வர் இந்தவிவகாரத்தில் முழுக்கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு உத்திரவிட்டு அறிவுரைகளையும் வழங்கினார்.இந்தநிலையில்  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் அறிவுரையின்படி கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து அச்சமின்றி வேலை செய்ய வேண்டும்  கடையநல்லூர் போலீசார் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு வழங்குவார்கள் என   உறுதியளித்தார்.மேலும் தென்காசி மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநிலத்தொழிலாளர்கள் ஏதேனும் பிரச்சனைகள் உருவானால் தொடர்புகொண்டு தகவல் உதவி பெறுவதற்கு இந்தி தெரிந்த ஒருகாவலரை நியமித்து தனி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி 9498193455,9385678039 என்ற எண்களில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடையநல்லூரில் வெளி மாநிலத்தவர்கள் அச்சமின்றி வேலை செய்ய கடையநல்லூர் காவல்துறை முழு பாதுகாப்பு
 

Tags :

Share via