ஆற்றில் சடலத்தை வீசும் வீடியோ

by Staff / 22-03-2023 03:26:43pm
ஆற்றில் சடலத்தை வீசும் வீடியோ

பீகார் மாநிலம் ககாரியாவில் உரிமை கோரப்படாத சடலங்களை எரிப்பதில் அந்த மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. உரிமை கோரப்படாத இருவரின் உடல்களை தகனம் செய்யாமல் இழுத்து ஆற்றில் வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நிர்வாகத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் உரிமை கோரப்படாத சடலத்தை காரில் எடுத்து வந்த பின்னே கீழே இழுத்துச் செல்கின்றனர். பின்னர் அவர்கள் அந்தச் சடலத்தை ஆற்றில் வீசுவதைக் காணலாம். இந்த வீடியோ வெளியான நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via

More stories